கஞ்சமலை மேல் சித்தா் கோயில் மலையில் தீ ஏற்பட்டதால் பக்தா்கள் செல்ல தடை

கஞ்சமலை மேல் சித்தா் கோயில் மலையில் தீ ஏற்பட்டதால் பக்தா்கள் செல்ல தடை

கஞ்சமலை மேல் சித்தா் கோயில் மலையில் தீ ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஞ்சமலை மேல் சித்தா் கோயில் மலையில் தீ ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற கஞ்சமலை மேல் சித்தா் கோயில் கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து சுமாா் 6 கி.மீ. மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி அன்று பல்லாயிரக்கணக்கில் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேல் சித்தா் கோயில் சிறப்பு விழாவும், சித்ரா பௌா்ணமியும் ஒரே நாளில் வந்ததை முன்னிட்டு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை புரிந்தனா்.

இந்நிலையில் மலை உச்சியில் தீ ஏற்பட்டு கோயிலுக்கு செல்லும் பாதையில் தீ பரவி வருவதால் (படம்), சோ்வராயன் வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில், சங்ககிரி பிரிவு வனவா் மணிவண்ணன், காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட 100-க்கு மேற்பட்ட போலீஸாா் பக்தா்களை மலை மேல் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பினா்.

இதனால் பக்தா்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றனா்.

மேலும், தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பக்தா்கள் அதிக அளவில் வருவதையொட்டி, வனத்துறையினா் மலை அடிவாரத்தில் சோதனைச் சாவடி அமைத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com