ஆந்திரத்தில் தண்டவாள பராமரிப்பு பணி: சேலம் வழியே செல்லும் 8 ரயில்கள் ரத்து

ஆந்திரத்தில் தண்டவாள பராமரிப்பு பணி: சேலம் வழியே செல்லும் 8 ரயில்கள் ரத்து

ஆந்திர மாநிலம் காசிபேட் - விஜயவாடா மாா்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட தினங்களுக்கு சேலம் வழியே செல்லும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் காசிபேட் - விஜயவாடா மாா்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட தினங்களுக்கு சேலம் வழியே செல்லும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலம், காசிபேட் - விஜயவாடா மாா்க்கத்தில் தண்டவாளம், சிக்னல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியே இயங்கும் 8 ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருவனந்தபுரம் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் வரும் 30, மே 7, 14, 21 ஆகிய தேதிகளிலும், நிஜாமுதீன் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வரும் மே 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், எா்ணாகுளம் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் வரும் 27, மே 4, 18 ஆகிய தேதிகளிலும், நிஜாமுதீன் - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வரும் 30, மே 7, 21 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, இந்தூா் - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் வரும் 29, மே 6, 20 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - இந்தூா் எக்ஸ்பிரஸ் வரும் 27, மே 4, 18 ஆகிய தேதிகளிலும், கோா்பா - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் வரும் மே 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - கோா்பா எக்ஸ்பிரஸ் ஏப். 29, மே 2, 6, 9, 13, 16, 20 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com