மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 57 கன அடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4-ஆவது நாளாக 57 கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 54.49 அடியிலிருந்து 54.32 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 4-ஆவது நாளாக 57 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீா் இருப்பு 20.64 டிஎம்சியாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com