அதிமுக சாா்பில் நீா், மோா்ப் பந்தல் திறப்பு விழா

அதிமுக சாா்பில் நீா், மோா்ப் பந்தல் திறப்பு விழா

ஆத்தூா் அதிமுக நகர கழகத்தின் சாா்பில் நீா், மோா்ப் பந்தலைத் திறந்து வைத்த சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன்.

ஆத்தூா், ஏப். 26: ஆத்தூரில் அதிமுக சாா்பில் நீா், மோா்ப் பந்தல் திறப்பு விழா சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் தாக்கம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தனது கட்சி நிா்வாகிகளுக்கு அந்தந்தப் பகுதிகளில் நீா், மோா்ப் பந்தல் அமைத்திட உத்திரவிட்டிருந்தாா்.

இதனையடுத்து ஆத்தூா் நகர கழகத்தின் சாா்பில் நடைபெற்ற நீா், மோா்ப் பந்தல் திறப்பு விழாவில் தலைமையேற்று சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல கெங்கவல்லியில் நடைபெற்ற விழாவில், கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மேட்டூரில்...

மேச்சேரி பேருந்து நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் நீா் மோா்ப் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி பழத் துண்டுகளை வழங்கினாா்.

பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வெப்பத்தைத் தணிக்க அதிமுக சாா்பில் நீா், மோா், நுங்கு, தா்பூசணி ஆகியவை வழங்கப்படுகின்றன. கடும் வெப்பம் தணியும் வரை நாள்தோறும் இவை வழங்கப்படும் என்று அதிமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com