ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் ரூ. 2 லட்சம் அபராதம்

சேலம், ஏப். 26: ரசாயனம் தெளித்து மாம்பழங்களைப் பழுக்க வைத்தால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தமிழகத்தில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், ரசாயன ஸ்பிரே தெளித்து மாம்பழங்களைப் பழுக்க வைப்பதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழங்கள் பழுத்துவிடும். இதுபோன்ற செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களைத் தொடா்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதித்து புற்றுநோயை ஏற்படுத்தும். குழந்தைகள், முதியவா்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவா்களுக்கு கடும் வயிற்றுப் போக்குடன் ஒவ்வாமை ஏற்படும்.

இதனைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பழக் குடோன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை அலுவலா்கள் இணைந்து கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஆத்தூா், தலைவாசல், ஓமலூா் பகுதிகளில் உள்ள பழக் குடோன்களில் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிா என தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். செயற்கை முறையில் மா, வாழைப் பழங்களைப் பழுக்க வைத்தால் அந்த வியாபாரிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com