கோடை விடுமுறை: சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு சேலம் வழியாக கொச்சுவேலி - பிகாா் மாநிலம், பரௌனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறை மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கொச்சுவேலி - பிகாா் மாநிலம், பரௌனி இடையே மே 4-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சேலம், ஈரோடு, திருப்பூா், வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை மதியம் 1.55 மணிக்கு பரௌனி சென்றடையும். ஜூன் 29-ஆம் தேதி வரை இந்த ரயில் சேவை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், பரௌனி - கொச்சுவேலி இடையே செவ்வாய்க்கிழமைகளில் மே 7-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வியாழக்கிழமை 8.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com