புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸாா், அந்த அலுவலகத்தை சோதனை செய்தனா். அப்போது, 15-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டையில் சுமாா் 400 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை அனுப்பியவா்கள் குறித்து லாரி புக்கிங் ஊழியா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பந்தப்பட்ட நபா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com