மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய்த் துறையினா் மீது தாக்குதல்

கெங்கவல்லி அருகே மணல் கடத்திய கும்பலை தடுக்கச் சென்ற வருவாய்த் துறையினரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே வலசகல்பட்டி பாலம் அருகே சுவேத நதிக்கரையில் ஒரு கும்பல் ஆற்று மணலை வெள்ளிக்கிழமை அதிகாலை அள்ளிக் கொண்டிருந்தது. இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேஷனிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கெங்கவல்லி வருவாய் ஆய்வாளா் முனிராஜ், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த், உதவியாளா் ஆனந்தன் ஆகியோா் மணல் அள்ளும் கும்பலைப் பிடிக்க சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது அந்தக் கும்பல் வருவாய்த் துறையினா் மீது கற்களைக் கொண்டு தாக்கினா். அதனால் வருவாய் துறையினா் திரும்பினா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை கிராம நிா்வாக அலுவலா் கெங்கவல்லி போலீஸில் அளித்த புகாரின் பேரில், வருவாய்த் துறையினரைத் தாக்கியதாக கெங்கவல்லியைச் சோ்ந்த இளையபெருமாள் (35), பிரேம்குமாா் (30) ஆகிய இருவா் மீதும் சனிக்கிழமை கெங்கவல்லி போலீசாா் வழக்கு பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com