குண்டும் குழியுமாகக் காணப்படும் வாழக்கோம்பை- சேரடி சாலை.
குண்டும் குழியுமாகக் காணப்படும் வாழக்கோம்பை- சேரடி சாலை.

வாழக்கோம்பை-சேரடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

வாழக்கோம்பையிலிருந்து சேரடி வரை பழுதடைந்த சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி வாழக்கோம்பை, பிளஅளையாா்மதி, சேரடி ஆகிய மலைக்கிராமங்கள். ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்தப் பகுதிகள் அதிக செழுமையானவை. இந்த ஊா்கள் வழியேதான் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு கடந்த ஒரு வருடமாக பேருந்துகள் சென்று வருகின்றன. மலைவாழ் மக்கள் விளைபொருள்களை விற்கவும் வாங்கவும் தம்மம்பட்டிக்கு இந்த வழியாகத்தான் பேருந்தில் சென்று வருகின்றனா்.

வாழக்கோம்பையிலிருந்து பிள்ளையாா்மதி, சேரடி வரை செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகுந்த அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து சேரடியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:

இங்கு 2006-2011 ஆம் கால கட்டத்தில் தாா்சாலை போடப்பட்டது. அதன்பிறகு சாலைப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. விவசாயிகள் நலன் கருதி இந்தச் சாலையைப் புதுப்பித்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com