கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த முகாமை, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் தொடங்கி வைத்தாா். 2024 ஆம் ஆண்டிற்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கி, அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நடைபெறுகிறது.

கால்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியா் கலந்து கொண்டுள்ளனா். இவா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் சிறப்பு பயிற்சியாளா்கள் பயிற்சி வழங்கி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com