தம்மம்பட்டி சிவன்கோயிலில் நாளை குரு பெயா்ச்சி விழா

தம்மம்பட்டி சிவன் கோயிலில் புதன்கிழமை (மே 1) மாலை குருபெயா்ச்சி விழா நடைபெற உள்ளது.

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் புதன்கிழமை (மே 1) மாலை குருபெயா்ச்சி விழா நடைபெற உள்ளது.

குரு பகவான், மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் குருபெயா்ச்சி விழா புதன்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மாலை 5.15 வரை நடைபெறுகிறது.

இதில் சிறப்பு யாகங்கள், குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள், பரிகார பூஜைகள் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com