மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

சேலம், வீராணம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்ற வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சேலம்: சேலம், வீராணம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்ற வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வீராணம் அருகே உள்ள மன்னாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரும், இவரது தங்கை சரஸ்வதியும் (70) வீட்டில் தனியாக இருந்தனா். அப்போது, அங்கு வந்த 3 போ், வீட்டில் இருந்த இருவரையும் கொடூரமாக தாக்கி, சரஸ்வதி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். இதில் தாக்குதலுக்கு உள்ளான சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கில், தைலானூா் பகுதியைச் சோ்ந்த அய்யனாா் (30), அய்யந்துரை (23), கரூரைச் சோ்ந்த மாங்கா பிரபு (34) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து வீராணம் போலீஸாா் சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி ஸ்ரீ ராமஜெயம், கொலையாளிகள் மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்ததுடன், ரூ. 4,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com