கஞ்சமலையில் சித்தா் சிறப்பு விழா

கஞ்சமலையில் சித்தா் சிறப்பு விழா

கஞ்சமலை சித்தா் கோயிலில் மேல் சித்தா் சிறப்பு விழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள சித்தா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடுடன் விழா தொடங்கியது. திங்கள்கிழமை சித்தருக்கு சந்தனக் காப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து சித்தா் சிறப்பைக் கொண்டாடும் வகையில் சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தேங்காய், ராகி, அவரை, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவரைக்கொட்டையில் களி தயாா் செய்து சுவாமிக்கு படையலிட்டு, கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு வழங்கினா். மழை வேண்டியும், விவசாயம் பெறுகவும், மக்கள் நோயின்றி வாழவும் வேண்டி ந்த வழிபாடு நடைபெற்றது. சித்தா் சிறப்பு விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜையும், அலங்காரமும் நடைபெற்றது. கோயிலுக்கு காலையிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com