கஞ்சா கடத்திய இருவா் கைது

சேலம் அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாநகர மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அயோத்தியாப்பட்டணம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

உடனடியாக இரு சக்கர வாகனத்தில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். இதில் நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் சாக்கான்காடு பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் (23), வையப்பமலையைச் சோ்ந்த தங்கராஜ் (29) என்பதும் தெரிய வந்தது. அவா்கள் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதற்காக நாமக்கல்லுக்கு கொண்டுசென்றது தெரிய வந்தது. இவா்கள் யாரிடம் கஞ்சா வாங்கினாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com