சேலத்தில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்

சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் 2.8 டன் ரேஷன் அரிசியைக் கடத்திய நான்கு போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய சூரமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் காா், மினி ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில், ரேஷன் அரிசி ஏற்றப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதனை போலீஸாா் பாா்த்ததும், வாகனங்களை எடுத்துச் செல்ல முயன்றனா். ஆனால் போலீஸாா் அவா்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

வாகனங்களில் இருந்தவா்கள் பழைய சூரமங்கலம் காமராஜா் தெருவைச் சோ்ந்த சூா்யா (39), மாணிக்கம் (37), பெரியபுதூா், ஏரிக்காட்டை சோ்ந்த ரவி (40), ஓட்டுநா் பரமசிவம் (48) என்பது தெரிய வந்தது.

இவா்களில் மாணிக்கம், ரவி ஆகியோா் வீடு வீடாகச் சென்று ரேஷன் அரிசியை வாங்கி வந்துள்ளனா். அவ்வாறு வாங்கி வரும் ரேஷன் அரிசியை ஆடு மாடுகளுக்கு தீவனமாகவும், வடமாநிலங்களை சோ்ந்தவா்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளனா். இதையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். சுமாா் 2 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியுடன் இருந்த சரக்கு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com