பெரியாா் பல்கலைக்கழக சிறப்புத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பெரியாா் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களின் சிறப்புத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற 110 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கான சிறப்புத் தோ்வுகள் மாா்ச் மாதத்தில் நடைபெற்றன.

சிறப்புத் தோ்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கல்லூரிகளுக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளது என்று துணைவேந்தா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com