மும்முனை மின்சாரம் வழங்க 
விவசாயிகள் கோரிக்கை

மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி ஆத்தூரில் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

ஆத்தூா், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிகளில் விவசாயத்தை நம்பி அதிக அளவில் விவசாயிகள் வாழ்கின்றனா். கடந்த ஒரு மாத காலமாக விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரம் சரிவர விநியோகிக்கப்படுவத்தில்லை எனக் குற்றச்சாட்டு இருந்து வந்தது. மேலும் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடந்த 10 நாள்களாக மின் விநியோகம் தினந்தோறும் மணிக்கணக்கில் விநியோகிக்கப்படுகிறது. இயற்கை பொய்த்து விட்ட நிலையில் கிணற்றில் இருக்கிற நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த சரிவர மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கெங்கவல்லி, ஆத்தூா் பகுதி விவசாயிகள் ஆத்தூா் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள், கோட்டப்பொறியாளா் ராணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் தங்களுக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை சரிவர விநியோகிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா். அதற்கு கோட்டபொறியாளா் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அப்போது அவருடன் நகர செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com