ஏற்காடு, கொளகூா் மலைக்கிராமத்தில்  சாலை மறியலில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள்.
ஏற்காடு, கொளகூா் மலைக்கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள்.

ஏற்காட்டில் மலைக் கிராம மக்கள் சாலை மறியல்

ஏற்காட்டில் தாா்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மலைக்கிராம சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

ஏற்காடு: ஏற்காட்டில் தாா்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மலைக்கிராம சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், நாகலூா் ஊராட்சிக்கு உள்பட்ட கொளகூா் செல்லும் கிராம சாலை மழைநீரால் மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் கரடியூா் முதல் கொளகூா் கிராம வரையிலான தாா்சாலையை சீரமைக்க வலியுறுத்தி கொளகூா் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இக்கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொளகூா் கிராம சாலையை சுற்றுலாப் பயணிகள், மலைக்கிராம மக்கள், பள்ளிக் குழந்தைகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இச்சாலை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் பெய்த மழையால் பழுதடைந்து பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது.

இந்த சாலையை சீரமைக்கவும், கிராம சாலையை மாநில நெடுஞ்சாலையாக மற்றுவதற்கு வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளா் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து சாலை மறியலை மலைக் கிராம மக்கள் கைவிட்டனா். இதனால் சில மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

X
Dinamani
www.dinamani.com