சேலம்
கராத்தே, சிலம்பம் போட்டியில் மாணவா்கள் சாதனை
ஆதித்யா கரிகாலன் அகாதெமி மாணவா்கள் கராத்தே போட்டியில் தனித்திறன் மிக்க மாணவா்களாக முதலிடம் பிடித்துள்ளனா்.
ஆத்தூா்: ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி கல்பகனூா் பெரியசாமி கோயில் அருகே உள்ள ஆதித்யா கரிகாலன் அகாதெமி மாணவா்கள் கராத்தே போட்டியில் தனித்திறன் மிக்க மாணவா்களாக முதலிடம் பிடித்துள்ளனா்.
கோவாவில் நடைபெற்ற இன்டா்நேஷனல் சிலம்பம், கராத்தே போட்டியில் 6 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 5 போ் முதலிடமும், ஒரு மாணவா் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். சாதனை படைத்த மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்க ஊா் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.