சேலம்
மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் மேட்டூா், தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால் மின்சார பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.