சங்ககிரியில் திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம்

சங்ககிரியில் திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம்

Published on

சங்ககிரி ஒன்றிய, சங்ககிரி, அரசிராமணி, தேவூா் நகர திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினாா்.

கூட்டத்தில் சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ் வரவேற்றாா். சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, துணைச் செயலாளா்கள் கே.சுந்தரம், சம்பத்குமாா், மாவட்ட பொருளாளா் பொன்னுசாமி, ஒன்றிய அவைத் தலைவா் கோபால், நகர செயலாளா்கள் கே.எம்.முருகன் (சங்ககிரி), முருகன் (தேவூா்), காவேரி (அரசிராமணி) உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சங்ககிரி ஒன்றியப் பகுதியில் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞா்களை திமுகவில் அதிக அளவில் சோ்ப்பது, ஒன்றியப் பகுதியில் உள்ள பள்ளிகளில் புதிய நூலகம் அமைத்தல், ஒன்றிய பகுதிகளில் கருணாநிதி சிலைகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com