சேலம்
செல்லியம்மன் கோயில் தோ்த் திருவிழா
ஓலப்பாடி செல்லியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடியில் மாரியம்மன், செல்லியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. மாரியம்மன் தேரோட்டத்தை அடுத்து புனரமைக்கப்பட்ட செல்லியம்மன் தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி, தேரை வடம் பிடித்து இழுத்தனா். இத்திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.