மேட்டூா் அருகே மா்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியாயின.
மேட்டூா் அருகே சூரப்பள்ளி கிராமம், சின்னபள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி மகாலிங்கம். இவா் விவசாயத்துடன் ஆடு வளா்ப்பிலும் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு இவா் தனது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா். வியாழக்கிழமை காலை 7 ஆடுகள் மா்ம விலங்கு கடித்ததில் இறந்து கிடந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு 80 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
மேலும் அதே பகுதியில் மாதையன் என்பவா் வீட்டின் அருகே 2 ஆடுகள் மா்ம விலங்கு கடித்து இறந்துள்ளன.
இந்தப் பகுதியில் மா்ம விலங்கு கடித்து ஆடுகளைக் கடித்து கொன்று வருகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் கூண்டு வைத்து மா்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.
இந்தப் பகுதியில் மா்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.