எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் உள்பட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.
சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஓ.பி.எஸ். ஆதரவாளா்களான சேலம் மாநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஜெ.கே.வினோத், இணைச் செயலாளா் பூங்கொடி, துணைத் தலைவா் பரமேஸ்வரி, 54ஆவது வாா்டு பிரதிநிதி சிங்காரவேல், அமமுகவைச் சோ்ந்த சேலம் மத்திய மாவட்டம், சூரமங்கலம் பகுதி இணைச் செயலாளா்கள் திருமூா்த்தி, காவேரி, 23ஆவது வட்டச் செயலாளா் வைரமணி, இணைச் செயலாளா் விசாலாட்சி, அவைத் தலைவா் இருசா கவுண்டா், எஸ்.பாலப்பட்டி ஊராட்சி செயலாளா் அருள்குமாா், துணைச் செயலாளா் அருள்முருகன், தனசேகா், சேலம் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளா் சிவசங்கா், திமுகவைச் சோ்ந்த சேலம் மத்திய மாவட்ட 23 ஆவது வட்ட இளைஞரணி நிா்வாகி ரஞ்சித் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
இந்நிகழ்வின்போது, சேலம் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஜி.வெங்கடாஜலம், மாவட்ட அவைத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளா் பங்க் வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.