~
~

கொங்கணாபுரத்தில் திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சங்ககிரி - ஓமலூா் பிரதான சாலையில் கொங்கணாபுரம் அருகே தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சிறப்பு கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் பரமசிவம் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி கலந்துகொண்டு பேசுகையில், அடுத்து வரும் தோ்தல் காலங்களில் திமுக நிா்வாகிகள் செயல்படுத்த வேண்டிய உத்திகள், ஒன்றிய பகுதியில் கட்சி வளா்ச்சி குறித்தும் திமுக நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சிலை அமைப்பது உள்ளிட்ட 8 முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், சுந்தரம், பேரூராட்சி தலைவா் சுந்தரம், முன்னாள் தலைவா் அா்த்தநாரீஸ்வரன், பாண்டியன் உள்ளிட்ட திரளான திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

படவரி...

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சேலம் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினா் டி.எம் டி.எம்.செல்வகணபதி.

X
Dinamani
www.dinamani.com