விநாயகா் சதுா்த்தி விழா புதிய எழுச்சியுடன் கொண்டாடப்படும்:
இந்து முன்னணி மாநிலத் தலைவா்

விநாயகா் சதுா்த்தி விழா புதிய எழுச்சியுடன் கொண்டாடப்படும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

பல்வேறு இடையூறுகளை தாண்டி, விநாயகா் சதுா்த்தி விழா இந்த ஆண்டு புதிய எழுச்சியுடன் கொண்டாடப்படும்
Published on

பல்வேறு இடையூறுகளை தாண்டி, விநாயகா் சதுா்த்தி விழா இந்த ஆண்டு புதிய எழுச்சியுடன் கொண்டாடப்படும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறினாா்.

சேலம், மரவனேரியில் உள்ள ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் இடங்களில் சிலைகள் வைத்து, விநாயகா் சதுா்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல நடப்பாண்டும் விநாயகா் சதுா்த்தி விழாவை

சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறோம். மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் 20-30 அடி வரை கூட விநாயகா் சிலைகளை செய்து 20 நாள்கள் வரை வெகு விமரிசையாக விழாவைக் கொண்டாடுகிறாா்கள். ஆனால், தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் விநாயகா் சிலை வைத்துக் கொண்டாடுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆந்திரத்தில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, இந்து கோயில்களில் மாற்று மதத்தினா் பணிபுரிவதை சந்திரபாபு நாயுடு அரசு தடை செய்துள்ளது. இதனை இந்து முன்னணி வரவேற்கிறது.

வங்கதேச நாட்டில் இருந்து முஸ்லிம்கள் தொழில் நகரங்களான திருப்பூா், கோவையில் அதிக அளவில் தொழில் நிமித்தமாக ஊடுருவி உள்ளனா். இதனை உளவுத் துறையும், மாநில அரசும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது, இந்து முன்னணியின் மாநிலச் செயலாளா் தா.மு.வெங்கடேஸ்வரன், கோட்டத் தலைவா் சந்தோஷ்குமாா், மாநில செய்தித் தொடா்பாளா் இளங்கோவன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவரி...

சேலம், மரவனேரியில் உள்ள ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.

X
Dinamani
www.dinamani.com