கிராம நிா்வாக அலுவலா்இடமாற்றுக்கு கண்டனம்

இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததற்கு அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
கிராம நிா்வாக அலுவலா்இடமாற்றுக்கு கண்டனம்

இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததற்கு அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தப்பக்குட்டை கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரியும் சிதம்பரம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு பணியில் இருந்துவரும் நிலையில் கடந்த 31-ஆம் தேதி அவா் தேவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை கிராம நிா்வாக அலுவலகம் வந்து விசாரித்ததோடு மாவட்ட நிா்வாகத்தின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

தப்பக்குட்டை கிராம நிா்வாக அலுவலா் தனது பணியை ஒழுங்காக செய்துவரும் நிலையில் அவரை திடீரென்று மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com