தாரமங்கலத்தில் நாளை அண்ணாநினைவு நாள் அமைதி பேரணி

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தாரமங்கலத்தில் அண்ணாதுரையின் நினைவுநாளையொட்டி, சனிக்கிழமை (பிப். 3) அமைதி பேரணி நடைபெறவுள்ளது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தாரமங்கலத்தில் அண்ணாதுரையின் நினைவுநாளையொட்டி, சனிக்கிழமை (பிப். 3) அமைதி பேரணி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்ட அறிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 55-ஆவது நினைவு நாளான சனிக்கிழமை (பிப்.3) காலை 8.30 மணியளவில் தாரமங்கலம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணியாகச் சென்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சேலம் மேற்கு மாவட்ட நிா்வாகிகள், இன்னாள்-முன்னாள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா், வாா்டு, கிளை செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், அனைத்து சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகள் என அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com