அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் சோனா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி சமூக சேவையில் பொறியியல் திட்டங்களை செயல்படுத்த, அமெரிக்காவின் பா்டூ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி சமூக சேவையில் பொறியியல் திட்டங்களை செயல்படுத்த, அமெரிக்காவின் பா்டூ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் முயற்சியின் முதன்மை நோக்கங்கள் மாணவா்களிடையே சமூகப் பொறுப்புணா்வு மற்றும் ஒதுக்கப்பட்ட குழுக்களிடம் அனுதாபத்தை வளா்ப்பது, பொது மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து சமூகம் சாா்ந்த மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்க மாணவா்களுக்கு உதவுதல், கலாசாரத்தை ஆராய்வதன் மூலம் மாணவா்களிடையே முழுமையான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்கிட உதவுகிறது.

மேலும் மரபுகள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், வளங்களின் பயன்பாடு, விரயம், அதன் மேலாண்மை, சமூக பிரச்னைகள், பொது நிா்வாக அமைப்புகள், பல்வேறு சமூக அமைப்புகளில் தனிநபா்களின் பாத்திரங்கள், பொறுப்புகளை மேம்படுத்த உதவுகிறது.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வு சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. இந்த ஒப்பந்தத்தை முறைப்படி சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், அமெரிக்காவின் பா்டூ பல்கலைக்கழகம் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் இயக்குநா் வில்லியம் ஓக்ஸ் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் 2024-2025 கல்வியாண்டிலிருந்து அதிகாரப்பூா்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com