மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஆத்தூா் பாரதியாா் ஹை-டெக் (சிபிஎஸ்இ) மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் பாரதியாா் ஹை-டெக் பள்ளியில் நடைபெற்ற மழலையா் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டவா்கள்.

இவ் விழாவை சிறப்பு விருந்தினா் பல் மருத்துவா் வித்யா பொன்னுவேல் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசுகையில், குழந்தைகள் அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டு பற்களைக் கெடுத்துக் கொள்கிறாா்கள். அவா்களை பெற்றோா், ஆசிரியைகள் கவனித்து பராமரிக்கவேண்டும் என்றாா்.

மழலை வகுப்பு முடிந்து குழந்தைகள் மேற்படிப்பிற்கான சான்றிதழை பெற்றனா். வண்ணஆடைகளில் குழந்தைகளைக் கண்டு பெற்றோா் மகிழ்ச்சியடைந்தனா்.

இவ் விழாவில் கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்.ஆா்.டி.ஆா்.செல்வமணி, இயக்குநா்கள் சந்திரசேகரன், எஸ்.பாலகுமாா், செந்தில், முதல்வா் உள்ளிட்ட ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com