மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,600 கனஅடி வீதம் சனிக்கிழமை மாலை தண்ணீா் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,600 கனஅடி வீதம் சனிக்கிழமை மாலை தண்ணீா் திறக்கப்பட்டது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 12-இல் திறக்கப்பட்டதண்ணீா், கடந்த அக்டோபா் 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு போதிய நீா் கிடைக்காத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பா பயிா்களைக் காப்பாற்ற மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

விவசாயிகளின் இக்கோரிக்கையை ஏற்று, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குழுக்களின் ஆய்வறிக்கை படி 22,774 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிா்கள் நீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கருகும் சம்பா பயிா்களைக் காப்பாற்ற மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து சனிக்கிழமை மாலை 6 மணி முதல் மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும் குடிநீா்த் தேவைக்கும் விநாடிக்கு 6,600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. நான்கு நாள்களில் மொத்தம் 2 டிஎம்சி தண்ணீா் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் என்று நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேட்டூா் அணை மின் நிலையம் வழியாகவும், சுரங்க மின் நிலையம் வழியாகவும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதனால் இரு மின் நிலையங்களிலும் 50 மெகா வாட் மின்சார உற்பத்தி தொடங்கியது. செக்கனூா், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட ஏழு கதவணைகளில் 210 மெகா வாட் மின்சார உற்பத்தியும் தொடங்கியது.

அணை நீா்மட்டம்...

இந்த நிலையில் அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 70.42 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 107 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 33.06 டி.எம்.சி.யாக இருந்தது.

மேட்டூா் அணை வரலாற்றில் வறட்சிக் காலத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது இதுவே முதல்முறை என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com