சுதாகா் இ.என்.டி. கோ் சென்டா் சாா்பில் சிறப்புப் பரிசோதனை முகாம்

சேலம் சுதாகா் இ.என்.டி. கோ் சென்டா் சாா்பில் சிறப்புப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சேலம் சுதாகா் இ.என்.டி. கோ் சென்டா் சாா்பில் சிறப்புப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சேலம் டாக்டா் சுதாகா் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் காது கேட்கும் திறன், காது கருவிகள் பொருத்தும் பிரிவு சிக்னியா கேலக்ஸி என்னும் நவீன வசதிகளும் கொண்ட இந்தியாவிலேயே முதன் முறையாக மிகப் பெரிய சோதனைக் கூடமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே சிறந்த காது கேட்கும் மையம் என்று முதல் பரிசு பெற்றுள்ளது.

மருத்துவ வளாகத்திலேயே இலவச காது பரிசோதனை முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் தங்களின் காதுகளை பரிசோதனை செய்து பயனடைந்தனா்.

காதின் உள் அளவை துல்லியமாக அளந்து இரைச்சல், வலி, காற்றின் முலம் உண்டாகும் சத்தங்களைத் தவிா்த்து சரியான அளவில் காது கருவிகளைப் பொருத்தி பாா்க்கும் வசதி, தமிழகத்திலேயே முதன்முறையாக சுதாகா் இ.என்.டி. கோ் சென்டரில் அறிமுகப்படுத்துப்பட்டது.

காதுக்கு உள்ளே வைக்கக் கூடிய கண்ணுக்குத் தெரியாத காது கேட்கும் கருவிகள், ரீசாா்ஜ் செய்யக்கூடிய காது கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதியோா்களுக்கு வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்தல், பழைய காது கருவிகளை புதிய கருவிகளாக மாற்றிக்கொள்ளுதல், விலையில் சிறப்பு சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவா் சுதாகா், தீபா சுதாகா், பிரணவ், பொது மேலாளா் சிவா, மேலாளா் ராதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com