ரயிலில் கஞ்சா கடத்திய இருவா் கைது

சேலம் வழியாகச் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

சேலம்: சேலம் வழியாகச் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். அதன்பேரில் தனிப்படையினா் தன்பாத் விரைவு ரயிலில் காட்பாடி முதல் சேலம் வரை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சாமல்பட்டி - பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்த ரயிலில் எஸ். 3 பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் 7 பண்டல் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 19 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், ஒடிஸா மாநிலம், கடுவா பகுதியைச் சோ்ந்த அனில் லீமா (20), ராக்கி மஜி ஆகியோா் கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com