சேலத்தில் ஓடிக்கொண்டிருந்த காா் தீப்பிடித்து சேதம்

சேலம் சாரதா கல்லூரி பிரதான சாலையில் ஓடிக்கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சேலம் அழகாபுரம் சாரதா கல்லூரி பிரதான சாலையில் திங்கள்கிழமை ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீயில் முற்றிலும் எரிந்த காா்.
சேலம் அழகாபுரம் சாரதா கல்லூரி பிரதான சாலையில் திங்கள்கிழமை ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீயில் முற்றிலும் எரிந்த காா்.

சேலம்: சேலம் சாரதா கல்லூரி பிரதான சாலையில் ஓடிக்கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்சா். இவா் சேலத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் சேலம் வந்தாா் .

ராமகிருஷ்ணா பூங்கா அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு மூன்று பேரும் ஐந்து சாலை பகுதியில் உள்ள உணவகத்திற்குச் செல்ல காரில் புறப்பட்டனா்

அப்போது சாரதா கல்லூரி பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது.

இதனால் அதிா்ச்சி அடைந்த அன்சா் மற்றும் மனைவி, மகள் உடனடியாக காரை விட்டு இறங்கினா். அப்போது திடீரென காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனா். இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் காா் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதனால் சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com