தகரப்புதூரில் மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் மேம்பாலம் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனா்.
தகரப்புதூா் எஸ் வடிவச் சாலை.
தகரப்புதூா் எஸ் வடிவச் சாலை.

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் மேம்பாலம் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

தம்மம்பட்டி அருகே தகரப்புதூா் ஊராட்சி உள்ளது. தம்மம்பட்டியிலிருந்து கெங்கவல்லி செல்லும் வழியிலுள்ள இந்த ஊராட்சியின் எல்லையானது, ஒரு சிற்றோடை செல்லும் தரைப்பாலத்துடன் முடிவடைகிறது. அந்த ஓடைக்கு கிழக்குப்புறம் கூடமலை ஊராட்சி தொடங்குகிறது. இதில் ஓடையின் மேல் செல்லும் தரைப்பாலத்தில் போடப்பட்டுள்ள தாா்ச்சாலையானது, ஆங்கில எழுத்தான எஸ் வடிவில் மிகுந்த வளைவில் செல்கிறது. இதனால் அந்த வளையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இரவில் புதிதாக இப்பகுதிக்கு வாகனத்தில் வருவோா் எஸ் வடிவ வளைவில் சரியாகத் திருப்பாமல் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, இந்த சிற்றோடையின் மேல் 7 அடி உயர மேம்பாலம் அமைத்தால், பெரம்பலூா், சேலம், ஆத்தூா் மாா்க்கங்களில் செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, தகரப்புதூா் சிற்றோடையில் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள், மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com