மேட்டூா் அணை நீா்மட்டம் 1 அடி குறைந்தது

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது.

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீா் இன்றி கருகும் சம்பா நெற்பயிா்களைக் காப்பாற்ற சனிக்கிழமை மாலை மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் விநாடிக்கு 6, 600 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு ஞாயிற்றுக் கிழமை மாலை விநாடிக்கு 5,600 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

திங்கள்கிழமை காலை அணையிலிருந்து விநாடிக்கு 5,600 கன அடிவீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை 70.42 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 69.42 அடியாகச் சரிந்தது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 1 அடி சரிந்துள்ளது.

மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 86 கன அடிவீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீா் இருப்பு 32.20 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com