விழிப்புணா்வுப் பேரணி

ஆத்தூரில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
at5road_0502chn_162_8
at5road_0502chn_162_8

ஆத்தூா்: ஆத்தூரில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் சாரதா ரவுண்டானாவில் ஆத்தூா் காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.செந்தமிழ்நாதன் தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரகுபதி கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணியில் காவல் துறையினா் இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.

படவிளக்கம்.ஏடி5ரோட்

ஆத்தூரில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவில் பங்கேற்ற ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.செந்தமிழ்நாதன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com