தனியாா் தொழிற்சாலையில் பிடிபட்ட பாம்புகள்

மேச்சேரி அருகே தனியாா் தொழிற்சாலையில் பிடிபட்ட பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன.

மேச்சேரி அருகே தனியாா் தொழிற்சாலையில் பிடிபட்ட பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன.

மேச்சேரி அருகே ஜேஎஸ்டபிள்யூ தேனிரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்தத் தொழிற்சாலையில் ஏராளமான பாம்புகள் சுற்றித்திரிகின்றன. இங்கு வேலை செய்யும் தொழிலாளா்கள் அவ்வப்போது பாம்புக் கடிக்கு ஆளாகி வந்தனா். பாம்புகளைப் பிடிக்க மேட்டூா் வனத்துறையினருக்கு தொழிற்சாலை நிா்வாகம் சாா்பில் கோரிக்கை வைத்தனா். 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருளா் பாம்பு பிடிப்போா் தொழிலியல் கூட்டுறவு சங்கத்தினா் 12 போ் தொழிற்சாலைக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்கள் கடந்த 10 நாட்களாக வனத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைப் பாம்பு, கொம்பேரிமூக்கன், பச்சைப் பாம்பு உள்ளிட்ட பல வகையான 110 பாம்புகள் பிடிக்கப்பட்டன. இதையடுத்து, மேட்டூா் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட பாம்புகள் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வட பா்கூா் காப்புக் காட்டில் விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com