அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு

தம்மம்பட்டியில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

தம்மம்பட்டியில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

தம்மம்பட்டி, காந்திநகா் பகுதியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையம் (அங்கன் வாடி மையம்)செயல்படுகிறது. இதில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 6 போ் பயில்கின்றனா். இந்த மையத்திற்கு சுசீலா என்பவா் ஆசிரியையாக உள்ளாா். இந்த மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 6 குழந்தைகளும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தனா். அதைத் தொடா்ந்து அவா்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதனால் பதற்றமடைந்த அங்கன்வாடி மையத்தினா், குழந்தைகள் ஆறு பேரையும் தம்மம்பட்டியிலுள்ள வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதில் ஜெசிகா, அமீரா பாத்திமா ஆகிய 2 குழந்தைகள் கூடுதல் சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com