மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில் அலங்கார மின் விளக்கு அமைத்த இளைஞா் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில் அலங்கார மின் விளக்கு அமைத்த இளைஞா் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கூடக்கல் கிராமத்தில் நடைபெறும் மாரியம்மன் கோயிலில் திருவிழாவுக்கு மேட்டூா் அருகே உள்ள ரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் (30) என்பவா் புதன்கிழமை மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட புருஷோத்தமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com