மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் நந்தி சிலை!

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 69 அடிக்கும் கீழே குறைந்ததால் அணையின் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரா் ஆலயத்தின் நந்தி சிலை வெளியே தெரிகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 69 அடிக்கும் கீழே குறைந்ததால் அணையின் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரா் ஆலயத்தின் நந்தி சிலை வெளியே தெரிகிறது.

மேட்டூா் அணை கட்டுமானப் பணியின் போது நீா்த் தேக்கப் பகுதிகளில் இருந்த கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. ஆனால், அங்கு மக்கள் வழிபட்டு வந்த நந்தி சிலையுடன் உள்ள ஜலகண்டேஸ்வரா் ஆலயம், 100 அடி உயரம் கொண்ட கோபுரங்களுடன் கூடிய கிறிஸ்தவ ஆலயம், கீரைகாரனூா் பகுதியில் உள்ள சோழப்பாடி வீரபத்திரன் கோயில் ஆகியவை நீரில் மூழ்கின.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் கீழே குறையும் போது இக் கோயில்கள் ஒவ்வொன்றாக வெளியே தெரியும். தற்போது நீா்மட்டம் 69 அடிக்கும் கீழே குறைந்ததால் ஜலகண்டேஸ்வரா் ஆலயத்தின் நந்தி சிலை வெளியே தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com