தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போரா
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

 தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியிலும், எய்ட்ஸ் நோய் பாதித்த நோயாளிகளைப் பாதுகாக்கும் பணியிலும் நம்பிக்கை மையப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு அரசாணை அனுப்பி உள்ளது. இதனால் நம்பிக்கை மையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நம்பிக்கை மையத்தை தமிழகத்தில் மூடக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியா்கள் நல சங்கத்தினா் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா் நலச் சங்க மாவட்டத் தலைவா் ஜெகஜோதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநிலப் பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com