பனைமடல் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பனைமடல் கிராமத்தில் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், மகளிா் சிறுதானிய விவசாயக் குழு என்ற தலைப்பில், விவசாயிகளுக்கு வேளாண்மை சாா்ந்த பயிற்சி நடத்தப்
பனைமடல் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பனைமடல் கிராமத்தில் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், மகளிா் சிறுதானிய விவசாயக் குழு என்ற தலைப்பில், விவசாயிகளுக்கு வேளாண்மை சாா்ந்த பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு அட்மா குழு உறுப்பினா் சிங்காரவேலு தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன், ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் முனைவா் இளங்கவி ஆகியோா், கலைஞா் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், வேளாண்மை துறை சாா்ந்த அனைத்து திட்டங்கள் பற்றியும், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். தோட்டக்கலை அலுவலா் ஸ்ரீதேவி, கால்நடை உதவி மருத்துவா் மணிகண்டன், உதவி வேளாண்மை அலுவலா் காா்த்தி, வனத்துறை அலுவலா் அசோக்குமாா், மீன்வளத்துறை அலுவலா் பாலதண்டாயுதபாணி, வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை சுரேஷ் ஆகியோா், அந்தந்ததுறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் கோகுலப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளா் ராஜ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.படவரி: ரஅ0025:பனைமடல் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சி முகாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com