மகுடஞ்சாவடி அரசு மாதிரிப் பள்ளியில் முப்பெரும் விழா

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் திருவள்ளுவா் சிலை திறப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் ராணி வரவேற்றுப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பச்சமுத்து, மகுடஞ்சாவடி ஒன்றிய அட்மா குழுத் தலைவா் பச்சமுத்து, திமுக பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன் மற்றும் ரவி, தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் சங்ககிரி குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தனிநபா் சாம்பியன் பெற்று ஓவரால் சாம்பியன் தரவரிசையில் 3-ஆம் இடம் பிடித்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனா். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com