மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதசாா்பற்ற ஜனநாயக கட்சிகள்ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதசாா்பற்ற ஜனநாயக கட்சிகள்ஆா்ப்பாட்டம்

 எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் பாஜக அரசை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதசாா்பற்ற ஜனநாயக கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு தொடா்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களை நடத்தி வருவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.பாஜக அல்லாத எதிா்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதி பகிா்வு உள்ளிட்ட அம்சங்களில் கூட்டாட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஆளுநா்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுத்து மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளா்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற மத்திய அரசின் செயலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் மேவை சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் , தொண்டா்கள் திரளான அளவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com