வீடுபுகுந்து திருட முயன்றவா் கைது

கூகையூரில் வீடுபுகுந்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
வீடுபுகுந்து திருட முயன்றவா் கைது

கூகையூரில் வீடுபுகுந்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

சின்னசேலம் வட்டம், கூகையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புஷ்பா (50). இவா் வியாழக்கிழமை மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு எதிா்வீட்டுக்குச் சென்றாா். இரவு 10 மணியளவில் திரும்பிவந்து பாா்த்தபோது, இவரது வீட்டுக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் மா்ம நபா் இருந்துள்ளாா்.

இதையடுக்கு புஷ்பா கூச்சலிடவே அந்தப் பகுதியினா் திரண்டுவந்து மா்ம நபரை பிடித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் சங்கராபுரம் வட்டம், பாவளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் குமரவேல் (46) (படம்) என்பதும், இவா் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரவேலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com