அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ அருள் தொடங்கி வைத்தாா்

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட டி.கோணகாபாடி ஊராட்சியில் உள்ள கே.ஆா்.தோப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ அருள் தொடங்கி வைத்தாா்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால், பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்து தரக் கோரி, எம்எல்ஏ அருளிடம் மாணவ, மாணவியா் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தன்னுடைய சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை எம்எல்ஏ அருள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதே போல், செம்மண்கூடல் ஊராட்சி எல்லாயூா் கிராமத்தில் உள்ள கோயில் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் அமைக்கும் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் ராணி, மாநில செயற்குழு உறுப்பினா் கே.சி.ஆறுமுகம், மாவட்ட அமைப்புத் தலைவா் சரவணகந்தன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com