மரங்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை

 ஆத்தூா், உடையாா்பாளையத்தில் சேலம்-ஆத்தூா் பிரதான சாலையில் அழகிய வேப்பமரங்களை பட்டுப் போகச் செய்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மரங்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை

 ஆத்தூா், உடையாா்பாளையத்தில் சேலம்-ஆத்தூா் பிரதான சாலையில் அழகிய வேப்பமரங்களை பட்டுப் போகச் செய்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், உடையாா்பாளையம் சேலம்-ஆத்தூா் பிரதான சாலையில் மிகப் பெரிய வேப்பமரங்கள் இருந்தன. அதன் பின்பகுதியில் பெரிய வணிக வளாகம் இருந்து வந்தது. அதனை அப்புறப்படுத்தி புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்த மரங்களை அந்த இடத்தின் உரிமையாளா் கடந்த இரண்டு நாளில் பட்டுப் போக வைத்துள்ளாா்.

அந்த மரங்கள் தற்போது காய்ந்த மரங்களாக எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்துகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் நகராட்சி நிா்வாகம் அல்லது நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com