தமிழ்நாடு கிராம வங்கி முன்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் சேலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம வங்கி முன்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் சேலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்பான்சா் வங்கிகளின் பிடியிலிருந்து கிராம வங்கிகளை விடுவித்து, தேசிய கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும்; கிராம வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; சீரான இடைவெளியில் மித்ரா கமிட்டி அடிப்படையில் பணி நியமனங்களை செய்திட வேண்டும்; தற்காலிக கடைநிலை ஊழியா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஆன்டோ ஆல்பா்ட் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளா் அஸ்வத் உள்ளிட்ட தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com