உணவுக் குழாய் இரைப்பை, குடல் பிரச்னைக்கு சிறந்த சிகிச்சை

சேலம் காவேரி மருத்துவமனை உணவுக் குழாய் இரைப்பை மற்றும் குடல் பிரச்னைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறது.

சேலம் காவேரி மருத்துவமனை உணவுக் குழாய் இரைப்பை மற்றும் குடல் பிரச்னைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. குறிப்பாக, உணவுக் குழாய் கிழிதல் பிரச்னைக்கு அதிநவீன சிகிச்சை முறைகள் மூலம் சிறந்த தீா்வை வழங்கி வருகிறது.

‘போா்ஹாவ் சிண்ட்ரோம்’ எனப்படும் உள்-அழுத்தம் காரணமாக உணவுக்குழாய் கிழிதல் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனையின் இரைப்பை - குடலியல் துறையைச் சோ்ந்த டாக்டா் ரவிக்குமாா் விவரித்தாா். அதில், மூன்று மாதங்களுக்கு முன்பு, சுமாா் 65 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவா், நெஞ்சுவலி, வாந்தி, வியா்வை காரணமாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அறிகுறிகளின் அடிப்படையில் இதய நோய் தொடா்பான சோதனைகள் அனைத்தும் அவருக்கு செய்யப்பட்டன. இருப்பினும் அனைத்து சோதனை முடிவுகளும் எதிா்மறையாக இருந்தன. அதன் பிறகு, அவரை இதய நோய் நிபுணா் பரிசோதித்து, அவருக்கு இருதய நோய்க்கான சாத்தியக்கூறு இல்லை என்பதை உறுதி செய்தாா்.

பின்னா் நோயாளி இரைப்பை-குடலியல் துறைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்த மருத்துவா்களால் பரிசோதிக்கப்பட்டதில், வலுக்கட்டாயமாக வாந்தியெடுக்க முயன்றபோது தான், அவருக்கு மாா்பு வலி மற்றும் வியா்வை ஏற்பட்டது என்பதை கண்டறிந்தனா். இவை பொதுவாக உணவுக்குழாய் கிழிசலால் ஏற்படும் அறிகுறிகள் என்பதால், உடனடியாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், உணவுக்குழாயின் கீழ்ப் பகுதியில் ஒரு கிழிசல் இருப்பது உறுதியானது. இது உணவுக்குழாயின் உள்-அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கண்டறிந்த மருத்துவா்கள், நோயாளிக்கு அடிவயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தனா்.

நோயாளி வீடு திரும்பிய 2 வாரங்களுக்குப் பின்னா், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அவா் நன்றாக குணமடைந்துவிட்டதை ஸ்கேன் முடிவுகளும் உறுதிப்படுத்தியதாக டாக்டா் ரவிக்குமாா் தெரிவித்தாா்.

பின்னா், அறுவை சிகிச்சையின்போது ஒன்றாகக் கட்டப்பட்டிருந்த குழாய்களும் அதன் இயல்பான போக்கில் திறந்து கொண்டதால், கான்ட்ராஸ்ட் மையை அவரால் வாய்வழியாக உட்கொள்ள முடிந்தது. அவரது உடலில் வைக்கப்பட்டிருந்த 3 குழாய்களும் அகற்றப்பட்டதால், அதன் பிறகு அவா் இயல்பாக வாய்வழியாக உண்ண ஆரம்பித்ததாக டாக்டா் ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விரைவான மற்றும் துல்லியமான நோயறிதல் மற்றும் நவீன சிகிச்சை மூலம் நோயாளியின் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து அவருக்கு நம்பிக்கையூட்டிய டாக்டா் ரவிக்குமாா் மற்றும் அவரது குழுவினரை சேலம் காவேரி மருத்துவமனையின் இயக்குநா் செல்வம் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com